பயிர் பாதுகாப்பு :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காய்ப்புழு: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் பூக்கொண்டையையும், விதைகளையும் உண்ணும் 

பூச்சியின் விபரம்:

  • புழு பச்சை நிறமாகவும் பழுப்பு நிறக் கோடுகள் உடம்பில் தோன்றும்
  • அந்துப்பூச்சி பழுப்பு நிறமாகவும் V வடிவ குறியீட்டுகளும் பின்னிறக்கையில் குருப்பு கோடுபோல் ஓரத்தில் தோன்றும்

கட்டுப்படுத்தும் முறை:

  • புழுவை கையால் பொறுக்கி அழிக்கவும்
  • இனக்கவர்ச்சிப்பொறி எக்டர்க்கு 12 வைக்கவும்
  • என்.பி.வி 250 எல்.இ / எக்டர் தெளிக்கவும்
  • பாஸில்லஸ் துரின்ஜியன்ஸிஸ் உருவகம் 2கிராம் /  லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம்
  • முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரம்மா கைலோநிஸ் 5 சிசி / எக்டர் பயன்படுத்தவும்.

 

Poppy Adult Cut Worm
புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015